அரசியல் கட்சிகள் தத்தமது நாட்டினை மேம்படுத்தலெனும் உயரிய தொலைநோக்கு பார்வை கொண்ட சேவை மனப்பான்மையுடன் ஆரம்பிக்கப்படுகின்றன. எனவே, எதிர்க்கட்சிகளை எதிர்வுக்கட்சிகள் என்று அழைப்பதே சாலச் சிறந்ததாகும். அத்துடன், எதிர்வுக்கட்சி என அழைக்கப்படும்போது அரசியல்வாதிகள் தமது பொறுப்பை உணர்ந்து பெருந்தன்மையுடன் நாட்டு நன்மை கருதி ஒன்றுபட்டு உழைப்பர். தேர்தலின் பின் அனைத்து கட்சிகளும் தங்களது மாறுபட்ட சிந்தனைகளை முடிவுக்கு கொண்டு வருவதே நன்மை பயக்கும். மேலும், அடுத்த தேர்தல் வரை தத்தமது நாட்டிற்கு சேவை செய்யும் அடிப்படை நோக்கதினை மனத்திற் கொண்டு பொறுப்புணர்வுடன் செயல்படுதல் அவசியமாகும்.
நாட்டின் புதிய கொள்கைகளுக்கு திருத்தங்கள் தேவைப்பட்டால், எதிர்வுக்கட்சிகள் ஒப்புதல் அளிக்க மறுக்கும் சரியான எதிர்வு கூறும் காரணங்களை பட்டியலிட்டு பலனளிக்கும் பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வண்ணம் ஒன்றுபட்டு தமது நாட்டுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துவது நாடு செழிக்க பெரிதும் உதவும். எனவே, எதிர்வுக்கட்சிகள் என்பதே சிறந்த சொற் பிரயோகம் எனும் கருத்து ஏற்புடையாத, இல்லையா (PRO or NO?)?
How do you vote?