Card image cap
வெற்றி அணி நெதர்லாந்தா அல்லது அர்ஜென்டினாவா?
22
1

கால்பந்து விளையாட்டு நுட்பக்கங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும், நான் நிச்சயமாக கால்பந்து உட்பட பல விளையாட்டுகளின் ரசிகை. தற்போது மிகவும் சுவாரஷ்யமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கால்பந்து உலகக் கோப்பை 2022ன் வெற்றி அணி எதுவென கணிக்கும் நேரம் இது.

போட்டி முடிவுகள் எதிர்பாராத பல திருப்பங்களுடன் புரியாத புதிராக அனுமானங்களைக் கடந்து நடைபெறுகின்றது. நடந்து முடிந்த போட்டிகளின் எனது கணிப்புகள் தட்டுத் தடுமாறி ஒருவழியாக நிலை 30ஐ எட்டி உள்ளது என்பதனை மிகவும் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அதேசமயம், சுயமான உங்கள் கணிப்பே எப்போதும் சரியாக இருக்கும் என்பதையும் திரும்பவும் நினைவூட்டுவது எனது கடைமையாகும். இனி, அடுத்து நடைபெறவிருக்கும் போட்டிகளின் கணிப்புகளுக்குச் செல்வோமா?

நெதர்லாந்து எதிர் அர்ஜென்டினா போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது? நெதர்லாந்து எனும் எனது கணிப்பு சரியா இல்லையா என்பதை பகிரவும்.

How do you vote?

Card image cap