குறைந்த சர்க்கரை, ஆக்ஸிஜனேற்ற நிறைந்த டார்க் சாக்லேட் முன்பு நினைத்ததை விட மிகவும் ஆபத்தானது என்று ஒரு புதிய ஆய்வில் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்த 28 பிரபலமான டார்க் சாக்லேட் பிராண்டுகளில், 23 இல் ஒரு வயது வந்தவர் ஒரே நாளில் சாப்பிட வேண்டியதை விட அதிக காட்மியம் மற்றும் ஈயம் இருந்தது என இணையத்தில் வெளியான தகவல் தெரிவிக்கின்றது.
காட்மியம் என்பது மண்ணில் காணப்படும் ஒரு இயற்கைத் தனிமம் ஆகும். இது புற்றுநோயை ஏற்படுத்தும் முகவராகக் கருதப்படுகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.இவ்வண்ணம் இயற்கைத் தனிமம் ஆகிய ஈயம் ஒரு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிப்பதுடன் மூளை பாதிப்புக்கு கூட வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டார்க் சாக்லேட்டுக்குப் பதிலாக பால் சாக்லேட்டை தெரிவு செய்து, அதை ஒரு விருந்தாகப் பயன்படுத்துங்கள். எவ்வாறாயினும், இத்தெரிவும் நீங்கள் தினமும் சாப்பிடும் ஒன்று அல்ல. கனரக உலோக மூலப்பொருள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது, எனவே அவர்கள் டார்க் சாக்லேட்டைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
மொத்தத்தில், டார்க் சாக்லேட் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல எனும் கருத்து சரியா, இல்லையா?
How do you vote?