Card image cap
நல்ல புத்தகங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்பது சரியா, இல்லையா?
14
1

நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என பலராலும் பற்பல காலங்களில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், நடைமுறையில் நல்ல நட்பினை நாம் தேடிச்சென்று பெறுவது இல்லை. அது நமது சூழலில் உள்ள அயலவர்கள், கல்விக் கூடங்கள், தொழில் புரியும் இடங்கள், மற்றும் இதர சுற்றுப்புறத்தில் உள்ள அமைப்பால் தானாக அமையும். ஆனால், நல்ல புத்தகங்கள் என்பது விலைமதிப்பற்றது. நல்ல புத்தகங்கள் கிடைத்தற்கரிய நண்பர்கள் ஆகும்.

நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்களாக மாத்திரமன்றி நல் ஆசானாய், பாசமுள்ள சுற்றமாய், உத்வேக காரணியாய், சமயத்தில் சஞ்சீவினியாய், சரியான பாதை எதுவெனக் காட்டும் வழிகாட்டியாய், பல பரிமாணங்களில் எம்முடனேயே இருக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷம் ஆகும்.

எனவே. உங்கள் பார்வையில் நல்ல புத்தகங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்பது சரியா, இல்லையா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap