Card image cap
ஆத்ம ஞானத்தின் பொருட்டு ஐம்பொறிகள் அருளப்பட்டன என்பது சரியா, இல்லையா?
12
3

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

எனது புரிதல்:
ஐந்து கருவிகளையும் ஞானாக்கினியில் வேகவைத்துப் பக்குவப்படுத்தும் வழியால் பெற்ற மெஞ்ஞானமாகிய பூரணத்தின் சீலநெறியில் நிற்போர் உயரிய நிலைபேறுடைய தன்மையைப் பெறுவர்.

மேழும் விளக்குவதாயின்; பிறவியின் நோக்கமாகிய ஞானத் தேடலின் வழியில் செல்லவதற்காக வழங்கப்பட்ட மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து கருவிகளையும் பயன்படுத்தி ஏற்படும் ஆன்ம பக்குவத்தினால் மெஞ்ஞானம் சித்திக்கும். மெஞ்ஞானமானது பூரணத்தின் சீலநெறியில் நிற்க வைத்து உயரிய நிலைபேறுடைய தன்மையைப் பெறும் பேறினைத் தரும்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap