Card image cap
பரிபூரணத்தின் ஆதிமூலத்துடன் ஐக்கியமாவதே பிறப்பின் நோக்கமாகும் என்பது சரியா, இல்லையா?
14
1

குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

எனது புரிதல்:
பிறவியின் குறிக்கோள் தூய்மையின் உறைவிடமான பரிபூரணத்தின் ஆதிமூலத்துடன் ஐக்கியவதே எனும் எண்ணத்தை செயல்படுத்தத் தலைப்படாவிட்டால் உலகில் உடலெடுத்துப் பிறப்பதால் எந்தப் பயனும் இல்லை.

பிறிதொருவகையில் சொல்வதாயின்; உலக வாழ்க்கையில் புலன்களைச் செலுத்தி உழலுவதை விடுத்து பிறவியின் குறிக்கோள் தூய்மையின் உறைவிடமான பரிபூரணத்தின் ஆதிமூலத்துடன் ஐக்கியவதே எனும் எண்ணத்தை செயல்படுத்தத் தலைப்பட வேண்டும்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap