Card image cap
ஆக்கத்திற்கு அடிநாதம் இயற்கைவளம் என்பது சரியா, இல்லையா?
16
1

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு - குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

எனது புரிதல்:
எப்படி ஏர் முதலிய நிலத்தைப் பதப்படுத்தும் கருவிகளின்றி பெரும் விளைச்சலைத் தரும் பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் இருப்பார்களோ அவ்வாறே புயல் எனப்படும் சூறாவளியால் ஏற்படும் கடும் காற்று, வெள்ளம் முதலான சீரற்ற சீதோஷ்ண மாற்ற காலங்ளில் வளம் குறைவடைவதால் பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாமல் இருப்பார்கள்.

விரிவாகப் பார்ப்போமானால்; வளமான மண்ணிலிருந்து தாவரங்களுக்குத் தேவையான ஒட்டச்சிசன், ஊட்டச் சத்துக்கள் முதலான அனைத்து கிடக்கின்றன. சூறாவளியால் ஏற்படும் கடும் காற்று, வெள்ளம் முதலான சீரற்ற சீதோஷ்ண நிலையால்; அதிக ஈரலிப்பின் விளைவாக மண்வளம் கடுமையாகப் பாதிக்கப்படும். முக்கியமாக; நீர் தேக்கம் மண்ணில் வாயு பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாக பயிர் உற்பத்தியை மோசமாக பாதிக்கிறது.

ஆகவே, ஆக்கத்திற்கு அடிநாதம் பஞ்சபூத சமநிலையில் தங்கியுள்ள இயற்கைவளம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap