Card image cap
நல்வாழ்த்துக்களால் அகமும் புறமும் வளம் பெற்று வளரும் எனும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
18
0

அனைவரும், அனைத்தும் நிலைத்த நிறைவான வளம் பெறவேண்டும் எனும் நல்வாழ்த்து திக்கெட்டும் பரவிப் பலித்திட வேண்டும் என்ற உளமார்ந்த பிரார்த்தனையுடன் இவ்வாண்டின் முதற் குறிப்பு பகிரப்படுகின்றது.

இனி, எந்த ஆரம்பமும் ஏன் வாழ்த்துரையோடு தொடங்கி வைக்கப்படுகின்றது என ஆராய்ந்தால்; எண்ணங்களாலோ, சொற்களாலோ உள்ளன்போடு பகிரப்படும் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துபவரையும் வாழ்த்துப்பெறும் அனைவரையும்/அனைத்தையும் நிறைவாக உணர வழிவகுக்கும். நிறைவான நிலையிலுள்ள எதுவும், எதனையும் கடந்து சென்று செழித்து வளரும் ஆற்றல்மிக்கது.

ஆக, நல்வாழ்த்துக்களால் அகமும் புறமும் வளம் பெற்று வளரும் எனும் கூற்று சரியா, இல்லையா என்ற உங்கள் கருத்தைப் பகிரவும்.

How do you vote?

Card image cap