Card image cap
பருவகால மழையின் பொருட்டு மண்ணுலக நீர் வானிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது என்பது சரியா, இல்லையா?
17
1

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு - குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

எனது புரிதல்:
மழை தவறுதலைத் தவிர்ப்பதற்காகவே ஐம்பூதங்களால் மண்ணுலக நீர் வானிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

இன்னோரு வகையில் சொல்வதாயின்; காலம் தவறாது மழை பொழிய வேண்டுமாயின் மண்ணுலக நீர் பஞ்சபூதங்களினால் நீராவியாக வானிற்கு எடுத்துச் செல்லப்படுதல் இன்றியமையாதது ஆகும். ஆதலால், வானும் மண்ணும் ஒன்று மற்றொன்றில் தங்கி பஞ்சபூதங்களின் துணையினால் மண்ணுலக நீரை நீராவியாக வானிற்கு எடுத்து சுத்திகரிக்கப்பட்ட நன்னீரை மழையாக உருமாற்றி சுழற்சி முறையில் உலகிற்கு வழங்கும்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap