Card image cap
பஞ்ச பூதங்களின் சமநிலை விண்ணும் மண்ணும் சீராக இயங்க அவசியமாகும் என்பது சரியா, இல்லையா?
18
2

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு - குறள் 19:
தானம் தவமிரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

எனது புரிதல்:
பிரபஞ்சத்தின் அருளினால் விண்ணும் மண்ணும் சீராக இயங்கி வேள்வி தவம் முதலான யக்ஞங்கள் இடையறாது இடம் பெறுகின்றது.

மேலும் சிந்தித்தால்; பஞ்ச பூதங்களின் சமநிலையே உலகம், உயிர்கள் முதலான அனைத்துப் படைப்புகளும் சீராக இயங்கக் காரணமாகும். சமநிலை பிரபஞ்சத்தின் அருளினால் சரிவரப் பேணப்படுகின்றது. உதாரணமாக; உடலில் பஞ்ச பூதங்களின் சமநிலை குலைந்தால் நோய் உண்டாகின்றது. உலகில் பஞ்ச பூதங்களின் சமநிலை குலைந்தால் சீரற்ற காலநிலை நிலை உண்டாகும். இவை தவிர, பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபடும் முக்தி நிலை எய்தச் செய்யப்படும் தவம் செய்வதற்கும் உடலிலும் உலகிலும் பஞ்ச பூதங்களின் சமநிலை இன்றியமையாதது ஆகும். ஆக; பிரபஞ்சத்தின் அருளினால் உருவான படைப்பின் மூல காரணிகளான பஞ்ச பூதங்களின் சமநிலை வானும் மண்ணும் சீராக இயங்க அவசியமாகும்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap