Card image cap
பிரபஞ்சத்தின் அருளினால் அனைத்தும் ஓர் ஒழுங்கு முறையுடன் சரிவர இயங்குகின்றது என்பது சரியா, இல்லையா?
20
2

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு - குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

எனது புரிதல்:
உலக உயிர்ப்புக்கு நீர் எவ்வளவு அவசியமோ அவ்வண்ணம் அனைத்தும் ஓர் ஒழுங்கு முறையுடன் இயங்குவதற்கு பிரபஞ்சத்தின் அருள் அவசியம்.

தாவரங்கள் முதலான அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ நீர் எவ்வளவு அத்தியாவசியமான காரணியாக அமைகின்றதோ; அதேபோல் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஓர் ஒழுங்கு முறையுடன் சரிவர இயங்குவதற்குப் பிரபஞ்சத்தின் அருள் அவசியம்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap